இலங்கை

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ராஜபக்ஷக்களிலேயே, சமல் ராஜபக்ஷவே பொருத்தமானவர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 

நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறக்கூடிய நிலையில், ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மாத்திரமே இருப்பதால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக, சமல் ராஜபக்ஷவைக் களமிறக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும்போதே டிலான் பெரேரா இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளராக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டாலும், நாட்டின் சிறுபான்மை இனங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறுபவர் மாத்திரமே, ஜனாதிபதியாக முடியும்.

இதனைக் கருத்திற்கொண்டே, கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார, ஒன்றிணைந்த எதிரணியின் சார்ப்பில், சமல் ராஜபக்ஷவை களமிறக்க வேண்டுமெனக் கோரியிருந்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பிரதமர், ரணில் விக்ரமசிங்க களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை வீழ்த்துவதற்கு, ஐ.தே.கவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைத்து, பலமான எதிரணி ஒன்றை உருவாக்க வேண்டும்.” என்றுள்ளார்.

தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் தற்போது (இன்று சனிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. 

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்றலில் நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

இந்தியாவில் வேளாண் மசோதாக்களுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

இந்தியத் திரைவானில் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிய சாதனைச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அமைதியுற்றார்.

சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ன் நாடாளுமன்றித்தின் முன்னதாக அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் வாரத் தொடக்கத்தில் "மாற்றத்திற்கான எழுச்சி" இன் ஆர்வலர்கள் உருவாக்கிய "காலநிலை முகாம்" வெளியேற்றப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, நேற்று வெள்ளி மாலை ஹெல்வெட்டியா பிளாட்ஸில் கூடினர்.

ஒரு பயனுள்ள தடுப்பூசி பரவலாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் உலகளாவிய கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை இரண்டு மில்லியனை எட்டக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.