இலங்கை

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் நுண்கடன் செயற்பட்டினால், 78க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் அன்ரனி கலிஸ்சியஸ் தெரிவித்துள்ளார். 

நுண்கடன்களால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான ஊடக சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே, சிவில் சமூக அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கு மாகாணத்தில் மீள்குடியமர்வின் பின்னர் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு நுண்கடன்கள் உதவியாக இருந்தாலும் எதிர்காலத்தில் அதனூடாக பல அசெகரியங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர்.

வடக்கு மாகாணத்தில் இந்த நுண்கடன் செயற்பாடுகளினால் 59இக்கும் மேற்பட்ட தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் 19 வரையான தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இவ்வாறு நுண்கடன்களால் அன்றாடம் பல்வேறுபட்ட பிரச்சினைகள் உருவாகி வருகின்றன. ” என்றுள்ளார்.