இலங்கை

வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் மாகாண சபை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

மாகாண சபையின் அமர்வு, கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “மாகாண சபையின் ஐந்தாண்டு காலம் முடிவடைவதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில், மாகாண சபையின் முடிவடையும் கால எல்லைகள் குறித்து ஊடகங்களில் பல்வேறுபட்ட கதைகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் முதலாவது வடக்கு மாகாண சபை கடந்த 25.10.2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்தச் சபையின் ஐந்தாண்டுகள் காலம் எதிர்வரும் ஒப்டோபர் 25ஆம் திகதியுடன் முடிவடைகிறதென்பதை வெளிப்படுத்தியே இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்திருக்கின்றேன்.”என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.