இலங்கை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கொடுங்கோலாட்சிக்கு பழக்கப்பட்டவர்களால், இன்று முதிர்ச்சி பெற்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமலிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

சிறிகொத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த அரசாங்கத்தில் சட்டம் கைக்கு வந்தவாறு அமுல்படுத்தப்பட்டது. ஆனால், எமது அரசாங்கத்தில் அனைத்து சட்டமும் நீதிமன்றத்தினால் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளமைக்கு அமையவே முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் தான் வழக்குகள் தாமதம் அடைகின்றன. உடனடியாக தீர்ப்புக்கள் வழங்கப்படாததால் மக்கள் அரசாங்கம் மீது அலுத்துக் கொள்கின்றனர். இதனை தோல்வியுற்ற அரசாங்கமாக கருதுகின்றனர்.

உண்மையில் அனைத்தும் சட்டப்படி நடக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். நோயாளி இறந்தாலும் பரவாயில்லை வயிற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்பதே எமது குறிக்கோள். இதற்காக காலம் கடந்தாயினும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம்.

வழக்குகளை துரிதப்படுத்துவதற்காக புதிய நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் இதற்கான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்வாங்கப்பட்டதன் பின்னர் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

சில ஊடகங்கள் பாரிய ஊழல் மோசடியாளர்களை காப்பாற்றுவதற்காக அலோசியஸிடம் பணம் வாங்கிய சம்பவத்தை பெரிதுபடுத்திக் காட்டுகின்றன. இது நெத்தலி மீனை பெரிய மீனாக காட்டி உண்மையை மறைக்கும் செயலென்பதனை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இலங்கையர்கள் முதிர்ச்சி பெற்றுள்ள ஜனநாயகத்தை இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதனையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சமூகவலைத்தளங்களில் தூற்றுவதனையும் கொண்டு மக்கள் இதனை முதுகெலும்பற்ற ஒரு அரசாங்கமாக கருதுகின்றனர். உண்மையில் அவ்வாறு இல்லை. வளர்ச்சியடைந்த அமெரிக்கா ,பிரித்தானியா போன்ற நாடுகளில் முதிர்ச்சி பெற்ற ஜனநாயகமே நடைமுறையில் உள்ளது. அங்கு யாரும் தமது கருத்தை வெளிப்படுத்தலாம். எவரையும் தூற்றலாம். அதனையே நாமும் இங்கு நடைமுறை செய்கின்றோம்.கோட்டா மீண்டும் அரசியலுக்கு வந்து இராணுவ பாணியில் மக்களை நடத்தப் பார்க்கிறார். இது காலத்துக்கு ஒத்துவராத விடயம்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.