இலங்கை
Typography

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், வெளிநாடுகளில் வசிக்கும் மேலும் 14 தமிழர்கள் இலங்கைக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நேற்று முன்தினம் புதன்கிழமை பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 86 தனிநபர்கள் பட்டியலுடன், இந்த 14 பேரும் இணைக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் ஒழுங்கு விதிகள் சட்டத்தின் 47ஆம் பிரிவின் கீழ், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு:

1.நடராஜா சத்தியசீலன் அல்லது சீல் மாறன்
2.கமலசிங்கம் அருணசிங்கம் அல்லது கமல்
3.அன்ரனிராசா அன்ரனி கெலிஸ்டர் அல்லது பரதன்
4.சிவசுப்ரமணியம் ஜெயகணேஸ் அல்லது கணேஸ் அல்லது சாம்ராஜ்
5.பொன்னுசாமி பாஸ்கரன் அல்லது ஜெயகரன்
6.வேலாயுதம் பிரதீப்குமார் அல்லது கலீபன்
7.சிவராசா சுரேந்திரன் அல்லது வரதன்
8.சிவகுருநாதன் முருகதாஸ் அல்லது கதிரவன்
9.திருநீலகண்டன் நகுலேஸ்வரன் அல்லது புஸ்பநாதன்
10.மகேஸ்வரன் ரவிச்சந்திரன் அல்லது மென்டிஸ் அல்லது திருக்குமரன்
11.சுரேஸ்குமார் பிரதீபன்
12.கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி அல்லது மூர்த்தி
13.ஜீவரத்தினம் ஜீவகுமார் அல்லது சிரஞ்சீவி மாஸ்டர்
14.டோனி ஜியான் முருகேசபிள்ளை

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்