இலங்கை
Typography

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தோற்கடிப்பதற்காக முன்னிறுத்தப்படும் எதிரணி வேட்பாளர், அனைத்து மக்களினதும் நன்மதிப்பைப் பெற்றவராக இருக்க வேண்டும்.” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியின் பாராளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக வந்தால், ஆதரவு வழங்குவீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்கள் செல்வாக்குப் பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமே உள்ளது. அவரினால் தெரிவு செய்யப்படுபவருக்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள். அவர் சிறந்த ஒருவரையே தெரிவு செய்வார்.” என்றும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்