இலங்கை
Typography

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்தால் அமெரிக்க குடியுரிமையை நிராகரித்துக் கொள்வேன் என கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இடம்பெற்ற விசாரணையின் போது சமூகமளித்து வாக்குமூலம் வழங்கியதன் பின்னதாகச் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்தாகத் தெரிய வருகிறது.

இது தொடர்பாக மேலும் அறிகையில்; எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தன்னிடம் இன்னும் கோரவில்லை எனவும், அவ்வாறு கோரும் பட்சத்தில், தன் அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்து போட்டியிட முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவற்றுக்கான செயற்பாடுகளைக் குறுகிய காலத்திற்குள் செய்து முடிக்க இயலுமெனவும் தெரிவித்துள்ளதாக அறியவருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS