இலங்கை

“ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லரின் ஆட்சியை ஒத்த ஆட்சியை இலங்கையில் அமைக்க வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர், அளித்த அறிவுரை பொறுப்பற்ற – முட்டாள்தனமானது” என்று இலங்கைக்கான ஜேர்மனி தூதுவர் ஜோன் ரொட் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு ஒரு ஹிட்லர் தேவை என்று உபாலி தேரர் வெளியிட்டுள்ள மூர்க்கத்தனமான கருத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வெளியிட்ட கண்டனங்களுடன் தாம் முற்றிலும் இணங்கிப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘காவி உடை அணிந்து கொள்வது, பொறுப்பற்ற முட்டாள்தனமான கருத்துக்களை வெளியிடுவதைத் தடுக்காது என்பதையே இது நிரூபிக்கிறது. எமக்கு இன்னும் அதிகமான ஜனநாயகம் தேவை. உலகம் முழுவதற்கும் அது தேவை.” என்றும் ஜேர்மனி தூதுவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.