இலங்கை
Typography

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளருடன் இணைந்து செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். 

எதிரணி அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து அரசாங்கத்திற்கு எதிரான அணியைக் கட்டியெழுப்புவது தொடர்பான கலந்துரையாடலை நடத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 16 பேர் அணியினர் நேற்று செவ்வாய்க்கிழமை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவை சந்தித்தனர். அதன் பின்னர் ஊடகவியாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அனுர பிரியதர்ஷன யாப்பா இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பாக இன்னும் எந்தத் தரப்பிலும் தீர்மானிக்கப்படவில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கின்றது. தற்போது நாங்கள் எதிரணியை பலப்படுத்தும் செயற்பாடுகளையே முன்னெடுகின்றோம். இதன்படி எதிரணி தரப்பில் பெயர் குறிப்பிடும் வேட்பாளர் தொடர்பாகக் கலந்துரையாடி தீர்மானமெடுத்து அவரை நாங்கள் ஆதரிக்க நடவடிக்கையெடுப்போம்.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்