இலங்கை
Typography

வடக்கு மாகாண சபையின் பதவிக் காலத்தினை நீடிக்கக் கூடாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ்.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். 

அவர் கூறியுள்ளதாவது, “வடக்கு மாகாண சபையின் தேர்தலைப் பிற்போட்டு, தற்போதைய சபையின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே கடந்த ஆண்டு பதவிக்காலம் முடிந்த மூன்று மாகாண சபைகள் ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில், தனியொரு மாகாண சபையுடன், இலங்கை அரசாங்கம் சிறப்பு உடன்பாடு ஒன்றை செய்து கொள்ள முடியாது.

வடக்கு மாகாண சபையின், அங்கமாக இருக்கும் அவருக்கு சிறப்பு நிலை இருக்க முடியாது என்பது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குத் தெரியாமல் இருக்காது. எந்தவொரு சூழ்நிலையிலும், முதலமைச்சரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், கடந்த வார இறுதியில் ஒரே மேடையில் நெருக்கமாக தோன்றிய விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் உன்னிப்பாக ஆராயப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்