இலங்கை
Typography

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக இருக்கும் பௌத்த பிக்கு ஒருவரே தன்னை அச்சுறுத்தி வருவதாக கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சமூகவலைத்தளங்களில் எனக்கும், எனது குடும்பத்துக்கும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது. எனது பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

எனக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்குப் பின்னால், ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவரே இருக்கிறார். அவரின் பேஸ்புக்கில் எனக்கு எதிரான பதிவுகளை காணமுடியும்.

எனது கணவர் விடுதலை புலிகள் அமைப்போடு தொடர்பு வைத்திருந்ததாக சிலர் கூறுகின்றனர். அவ்வாறான எந்தவிதமான தொடர்புகளும் அவருக்கு இல்லை. இவ்வாறான போலியான பரப்புரைகளை செய்து பிரகீத் தொடர்பான விசாரணைகளை மூடிமறைக்கப் பார்க்கின்றனர்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்