இலங்கை
Typography

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் செலவுகளுக்காக நிதியுதவி கிடைத்த வழிமுறைகள் சம்பந்தமாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக சீனா பணம் வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

வேறு நாடுகளில் இருக்கின்ற வர்த்தகர்கள் மற்றும் பெரிய வர்த்தகர்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் சட்டவிரோத தொடர்புகளை வைத்திருந்ததாகவும், அந்த வர்த்தகர்களால் நாட்டுக்கு நட்டம் ஏற்பட்டாலும், அவர்களுக்கு நாட்டில் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதாகவும் சரத் பொன்சேகா குற்றஞ்சுமத்தியுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்