இலங்கை
Typography

ஏற்கனவே பல மாகாண சபைகளின் பதவிக் காலம் முடிவடைந்துள்ள நிலையில், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு பொது இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. 

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

சபாநாயகர் கரு ஜயசூரிய, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

தேர்தலுடன் தொடர்புடைய முக்கிய விடயங்கள் பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மாகாண சபைத் தேர்தலை பழைய மற்றும் புதிய முறைகளின் கீழ் நடத்துவது பற்றியும், எல்லை நிர்ணயம் தொடர்பாகவும், இதன்போது பேசப்பட்டது.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அடுத்த மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இதன்போது தெரிவித்துள்ளார். இதன்போது தெரிவிக்கப்படும் கருத்துக்களை கவனத்தில் கொள்ளுமாறு எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவரிடம் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS