இலங்கை
Typography

சமையல் எரிவாயுவின் விலையைக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

வாழ்க்கைச் செலவுக் குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் சில நாட்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை புதிய விலையை அறிவிக்கவுள்ளது.

அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, ரிஷாத் பதியுதீன், விஜித் விஜயமுனி சொய்ஸா ஆகியோரின் பங்கேற்புடன் இந்தக் குழு கூடியது. உலகச் சந்தையில் அமுலில் உள்ள விலைக்கு அமைவாக உள்ளூர் சந்தையிலும் சமையல் எரிவாயுவின் விலையைக் நிர்ணயிக்கவுள்ளது.

இதற்கமைவாகவே விலையைக் குறைக்க வாழ்க்கை செலவினக் குழு தீர்மானித்ததாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பணிப்பாளர் இந்திக்க ரணதுங்க தெரிவித்தார். எதிர்வரும் சில நாட்களில் நுகர்வோர் அதிகார சபை காஸ் சிலிண்டருக்கான விலையை அறிவிக்கவுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்