இலங்கை
Typography

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் தலைவர் ரோஹண விஜயவீரவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவருடைய மனைவி மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

ரோஹண விஜயவீரவின் மனைவி சிறீமதி சித்ராங்கனி விஜேவீர தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் சட்ட மா அதிபர் உள்ளிட்ட 11 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி உலபனே பிரதேசத்தில் வைத்து பாதுகாப்பு தரப்பினரால் ரோஹண விஜயவீர கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இதுவரை அவர் எந்தவொரு நீதிமன்றத்திலும் ஆஜர் செய்யப்படவில்லை என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். தனது கணவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது தொடர்பில் சட்டரீதியான முறையில் இதுவரை அறிவிக்கவில்லை என்றும், இதன்காரணமாக அவருக்கு நேர்ந்தது என்னவென்று தெரியாதிருப்பதாகவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS