இலங்கை
Typography

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து முதலில் தீர்மானிக்க வேண்டியது அமெரிக்காவே என்று அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார். 

திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதிக்கு பயப்படாது தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெற்றோம். அவ்வாறிருக்கையில், கோட்டாபய ராஜக்ஷவுக்கு அரசாங்கம் பயப்படுவதாக கூறுவது அர்த்தமற்ற ஒன்றாகும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS