இலங்கை

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சி போன்று ஹிட்லர் ஆட்சிக்கு சொந்தக்காரர்கள் நாங்கள் அல்ல” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

“மக்களுக்கு சேவை செய்யும் பொழுது கடந்த ஆட்சியைப்போல் ஹிட்லர் ஆட்சியை நாம் மேற்கொள்ளவில்லை. இன்று எமது நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி பேசுகின்றனர். ஆனால், அன்று அவர்கள் பெற்ற கடன்களையும் இன்று நாம் அடைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

பன்விலை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மக்களுக்கான சேவைகளை செய்வதில் எமது நல்லாட்சி அரசாங்கம் என்றும் பின்னிற்கப்போவதில்லை. ஊடகங்களை எடுத்துக் கொண்டால் எம்மை குறை கூறி திருடர் என்கின்றார்கள். இன்றும் ஒரு பத்திரிகையில் என்னைத் திட்டி எழுதியிருந்தார்கள். மக்களுக்கு சேவை செய்யும் பொழுது கடந்த ஆட்சியைப்போல் ஹிட்லர் ஆட்சியை நாம் மேற்கொள்ளவில்லை. அம்பாந்தோட்டை துறைமுகம் குரங்குகளின் கூடாரமாக இருந்தது. அதற்காகவே அங்கு நெல்லை கொட்டினோம். குரங்குகள் சாப்பிடுவதற்காக செய்தோம். இது தான் ஹிட்லரின் சகோதரரின் ஆட்சி காலமாகும்.

இன்று துறைமுகத்தை பார்த்தால் சர்வதேச கப்பல்கள் வந்து இறங்க கூடிய துறைமுகமாக காட்சியளிக்கின்றது. அதே போல் விமான நிலையமும் உள்ளது. இன்று எமது நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி பேசுகின்றனர். ஆனால் அன்று அவர்கள் பெற்ற கடன்களையும் நாம் அடைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுவே உண்மை நிலையாகும். ” என்றுள்ளார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.