இலங்கை

நாட்டினை துரிதகதியில் அபிவிருத்தி செய்யும் நோக்கில், அடுத்த ஆண்டுக்குள் 200 பில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

கண்டியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2015ஆம் ஆண்டு மோசமான நிலையில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை கிரமமான முறையில், விருத்தி அடையச் செய்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் துரிதகதியில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் திட்டமிட்டுள்ளோம். இதனடிப்படையில், அடுத்த வருட இறுதிக்குள் 160 முதல் 200 பில்லியன் ரூபா வரை பெறுமதிகொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அடுத்த வரும் மூன்று – நான்கு வருடங்களில் நாட்டின் பொருளாதாரம் கணிசமான வளர்ச்சி அடையும். அதன்பின்னர் நாட்டு மக்களுக்கு விசேட சலுகைகளும் பெற்றுக்கொடுக்கப்படும்.” என்றுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.