இலங்கை
Typography

“பதவிக்காலம் முடிந்துள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்காக, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் புதிய தேர்தல் சீர்திருத்தங்களை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் அல்லது தாமதமின்றி பழைய தேர்தல் முறைக்குத் திரும்ப வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் நிறைவுக்கு வந்தது. எனினும், அரசாங்கம் தேர்தல் முறையில் மாற்றம் செய்வதற்காக மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த தேர்தல் முறை மறுசீரமைப்பு முடங்கிப் போயுள்ளதால், இந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,

இந்த நிலையில், கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன், “மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றாலும், இன்னமும் அது தொடர்பான சட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. உடனடியாகத் தேர்தலை நடத்துவது தான், இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு உள்ள ஒரு வழி. அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் இது நடக்க வேண்டும்.

இரண்டு மாதங்களுக்குள் புதிய சீர்திருத்தங்களை சட்டமாக்கத் தவறினால், அரசாங்கம், இந்தப் பிரச்சினைக்குக் காரணமான திருத்தங்களை கைவிட வேண்டும். பின்னர் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க முடியும். நாங்களும் சீர்திருத்தங்களை விரும்புகிறோம். ஆனால், அதனைப் பயன்படுத்தி தேர்தல்களை தாமதிக்கக் கூடாது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்