இலங்கை
Typography

சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைதுசெய்யுமாறு சிங்கள ராவய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாட்டை செய்துள்ளது. 

“தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் வைத்து உரையாற்றியுள்ளார். ஆகையால், அவரை கைதுசெய்து, சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், எப்படி இருந்தோம் என்பதை உணர்வுபூர்வமான உணரும் நிலையில் இருக்கிறோம். இன்றுள்ள நிலையில் விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டியதே எமது முக்கிய நோக்கம்.” என்று விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று திங்கட்கிழமை உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்