இலங்கை
Typography

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணைத் தலைவராக நியமிக்க முடியாது என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலர் பேராசிரியர் ரோகண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சிலர் மஹிந்த ராஜபக்ஷவை சுதந்திரக் கட்சியின் இணைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் கட்சியின் யாப்பின்படி அதனைச் செய்யமுடியாது. சுதந்திரக் கட்சியின் யாப்பின் படி, கட்சியின் உறுப்பினராக உள்ள ஒருவர், நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், அவர் தானாகவே கட்சியின் தலைவராகவும் ஆகி விடுவார். முன்னாள் ஜனாதிபதிகள் காப்பாளர்களாகவே இருக்க முடியும். கட்சி யாப்பின்படி, சந்திரிகா குமாரதுங்கவும், மஹிந்த ராஜபக்ஷவும் காப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சி மிகப் பொருத்தமான ஒரு வேட்பாளரை நிறுத்தும். அந்த வேட்பாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் தெரிவு செய்யப்படுவார். அவர் பொதுவேட்பாளராக இருக்கமாட்டார். எனினும், மிகச் சிறந்த வேட்பாளரை அடுத்த தேர்தலில் நிறுத்துவது கடினமானது. அது சவாலை ஏற்படுத்தும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்