இலங்கை
Typography

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ள சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை, அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்துள்ளார். 

விஜயகலா மகேஸ்வரன் மீது முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகள் நிறைவுபெறும் வரை அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குமாறே பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் ஓங்கினால் மட்டுமே இந்நாட்டில் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வழ முடியும். இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும். இதுவே எமது பிரதான நோக்கம்.” என யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றியிருந்தார்.

குறித்த கருத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபருக்கு, சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளமை கூறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்