இலங்கை
Typography

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகினாலும், இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான அனைத்துலக ஈடுபாடு மாற்றமடையாது என்று இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் புதிய வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை நேற்றுமுந்தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற வாளாகத்தில் சந்தித்துப் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட ரெரன்ஸ் டி ஜோன்ஸ், “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியிருந்தாலும், 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அமுலாக்கம் தொடர்பாக, இலங்கை அரசாங்கத்தின் மீதான சர்வதேச ஈடுபாடு தொடர்ந்தும் மாற்றமடையாமல் இருக்கும்” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS