இலங்கை
Typography

இலங்கையில் நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தமாகவே உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக முன்மொழியப்பட்டுள்ள அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவராகப் பெயரிடப்பட்டுள்ள அலெய்னா ரெப்லிட்ஸ் கடந்த ஜூன் 28ஆம் திகதி வெளிநாட்டு உறவுகளுக்கான அமெரிக்க செனட் குழுவின் நேர்முகத் தேர்வுக்காக முன்னிலையானார்.

அப்போது உரையாற்றிய அவர்,

“2015இல் இலங்கை வாக்காளர்கள், ஊழல், முரண்பாடு, அடக்குமுறைகளை நிராகரித்து, மறுசீரமைப்பு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளித்தனர். எனினும், இலங்கையில் நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தமாகவே உள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், மிகவும் வலியைத் தரக் கூடியதாக இருந்ததுடன், இனங்களுக்கிடையிலான, மதங்களுக்கிடையிலான பிளவுகளை சீரமைக்கும் பணிகள் இன்னமும் முழுமையடையவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்