இலங்கை
Typography

“ராஜபக்ஷாக்கள் என்பவர்கள் ஒன்றாக இணைந்து பயணிப்பவர்கள். அவர்களிடையே பிரிவினை என்பது ஒருபோதும் கிடையாது.” என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்துக்கு கோட்டாபய ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை சென்றார். இதன்போது, தங்களின் கட்சி சார் அரசியல் பயணம் இன்றுடன் ஆரம்பிக்குமா? என ஊடகவியலாளர் ஒருவர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“கட்சியில் இடம்பெறும் அரசியல் நடவடிக்கையில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் கலந்துகொள்வதற்காகவே சமூகமளித்தேன். நான் அரசியலில் ஈடுபட்டுத்தான் வருகின்றேன். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ஷ தான் தீர்மானிக்க வேண்டும்.” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS