இலங்கை
Typography

யாழ்ப்பாணம் கோட்டையில் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்குவதை ஏற்க முடியாது என்று யாழ். மாநகர சபை மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணம் கோட்டை சுற்றுலா மையமாக காணப்படுகிறது. இதனால் கோட்டைக்குள் இராணுவத்தினரை அனுமதிக்க முடியாது. இதேவேளை குறித்த விடயத்திற்கு யாழ்ப்பாணம் கச்சேரியில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டத்திலும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தேன். அத்துடன், கோட்டைக்குள் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்