இலங்கை
Typography

ஐக்கிய நாடுகளின் அங்கமான, யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் இரினா பொகோவா இன்று சனிக்கிழமை மாலை இலங்கையை வந்தடைந்தார். அவருடன் யுனெஸ்கோ அமைப்பின் 6 தூதுவர்களும் இலங்கை வந்துள்ளனர். 

இலங்கையில் 2030ஆம் ஆண்டில் நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் எற்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலேயே யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் இலங்கை வந்துள்ளார்.

இரினா பொகோவாவின் இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, அமைச்சர் எஸ்.பி.நாவின்ன உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதுதவிர சீகிரியா உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க 08 இடங்களில் கண்காணிப்பு விஜயத்தினையும் மேற்கொள்ள உள்ளார்.    அத்தோடு, எதிர்வரும் 16ஆம் திகதி லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெறவுள்ள சமாதனம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலிலும் இரினா பொகோவா பங்கேற்கவுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS