இலங்கை
Typography

எல்லையற்ற அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

அதிகாரத்திற்கும் ஊழலுக்குமிடையிலான தொடர்பை துண்டிப்பதற்கு கடந்த மூன்று வருட காலப்பகுதியில் இலங்கை பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோர்ஜியாவின் திபிலிசி மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை ஆரம்பமான திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

திறந்த அரசாங்க பங்குடமையானது (OGP) பிரஜைகளுக்கான அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறுதல் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு பொறிமுறையாகும். ஜோர்ஜியாவின் பிரதமர் மாமுகா (Mamuka Bakhtadze) தலைமையில் மாநாடு ஆரம்பமானது. இம்மாநாட்டில் 75 உறுப்பு நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்கள், சபாநாயகர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்குபற்றினர்.

திறந்த அரசாங்க பங்குடமையை உறுப்பு நாடுகளின் நலன்களுக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்ற கருப்பொருளின் கீழ் அங்குரார்ப்பண கூட்டத்தொடர் ஆரம்பமானது. அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார்.

அந்த உரையில், “நான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படும்போது உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் எல்லையற்ற அதிகாரம் இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் இருந்தது. நான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு 06 மாதங்கள் நிறைவடைவதற்கு முன்னர் 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அந்த எல்லையற்ற அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்கி பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தேன்.

அன்று பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் மற்றும் ஆணைக்குழு அதிகாரிகள், ஜனாதிபதியின் விருப்பின் பேரிலேயே நியமிக்கப்பட்டு வந்தனர். இன்று அந்த அனைத்து நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புச் சபையினூடாக மேற்கொள்ளப்படுகின்றன.

நான் நாட்டை பொறுப்பேற்கின்றபோது அரசியல் அதிகாரத்தின் காரணமாக நீதித்துறையும் பாரிய ஊழலுக்கு உள்ளாகியிருந்தது. நீதித்துறையின் சுயாதீனதன்மையை பாதுகாப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்து ஆணைக்குழுக்களும் இன்று பலமான நிலையில் உள்ளதுடன், எவரும் தலையிட முடியாத வகையில் சுயாதீனமான, பக்கச்சார்பற்ற நிறுவனங்களாக அவை செயற்படுகின்றன.

அரசியல்வாதிகளாக இருந்தாலும் அரசாங்க அதிகாரிகளாக இருந்தாலும் தன்னிடமுள்ள தனிப்பட்ட அதிகாரத்தை முடியுமானளவு குறைத்து அதிகாரத்தை யாப்பு ரீதியாக கூட்டாண்மையிடம் பொறுப்பளிக்க வேண்டும். கருத்தரங்குகள், செயலமர்வுகள் ஊடாக அது தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவூட்டவும், ஊழல் மோசடியை ஒழித்துக் கட்டுவது தொடர்பாக சிவில் சமூகத்திடம் உள்ள அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்