இலங்கை
Typography

“இராணுவ மறுசீரமைப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, நானோ தலையிடுவதில்லை” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இராணுவ முகாம்கள் மற்றும் படைவீர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில், பாராளுமன்றத்தில் எழுந்த சர்ச்சையையடுத்து பதிலளிக்கும் போதே, பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இராணுவத் தளபதியின் தீர்மானத்துக்கு அமையவே படைகளில் மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. பல பதவி நிலைகள் உள்ளன. அவை எச்சந்தர்ப்பத்திலும் குறைக்கப்படமாட்டாது. இராணுவ முகாம்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. எமக்கு முகாம்களின் எண்ணிக்கையைத் தெரியப்படுத்துங்கள். அதற்கேற்ப நாம் செயற்படுவோம்.

படைகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது வழமையானதொரு விடயமாகும். அதற்கேற்பவே, தற்போதும் படையினர் மறுசீரமைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், நானும் ஜனாதிபதியும் தலையிடுவதில்லை.

ஆவாக் குழுவினர் பயங்கரவாதிகள் அல்லர். அவர்களை பொலிஸாராலேயே கையாள முடியும். இதில் சட்டமும் ஒழுங்கும் பிரச்சினையே உள்ளது. இராணுவ முகாம்கள் மற்றும் படையினர் விவகாரம் தொடர்பில், எதிர்க்கட்சியினர், இராணுவத் தளபதியுடன் சந்தித்துக் கலந்துரையாடலாம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்