இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரகுப்பணத்துக்கு ஆசைப்பட்டு நாட்டின் அரசியல் இறைமையையும், பொருளாதார இறைமையையும் காட்டிக் கொடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

“நாட்டைக் காட்டிக்கொடுத்தவர் தொடர்ந்தும் தேசப்பற்றாளராகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடியுமா? இதுபோன்றதொரு நிகழ்வு உலகின் வேறொரு நாட்டில் இடம்பெற்றிருந்தால் பாரிய அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும். துரதிஷ்டவசமாக இலங்கையில் அவ்வாறு எதுவும் ஏற்படாது. ஊழல் மோசடி தொடர்பில் எமது மக்களுக்கு கேட்டுக் புளித்துப்போய்விட்டது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சைனா மேர்ச்சன்ட் நிறுவனத்திடமிருந்து கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்கு 7.6 மில்லியன் அமெரிக்க டொலரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக் கொண்டதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையின் பிரஜை என்ற ரீதியில் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலளிக்கவேண்டிய கடப்பாடு உள்ளது. இதனைவிடுத்து அவர் தொடர்ந்தும் தேசப்பற்றாளர் எனக் காண்பிக்க முடியாது. இதுபோன்ற தலைவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட வேண்டும்.

நாட்டில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் பற்றிப் பேசியுள்ளோம். திறைசேரி முறி மோசடிபோன்ற மோசடிகளால் நாட்டின் பொருளாதாரத்துக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், சீன நிறுவனத்திடமிருந்து தேர்தல் பிரசாரத்துக்குப் பணம் பெற்றமையானது பொருளாதார பாதிப்பு மாத்திரமன்றி நாட்டின் இறைமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசப்பற்றாளர்கள் எவருக்கும் இந்த மோசடியை மறைக்க முடியாது. அதனை மறைப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மஹிந்தவின் உதவியின்றி அரசியல் செய்ய முடியாத அரசியல் அநாதைகளாவர்.
கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்தை முகாமைத்துவம் செய்யும் சீ.ஐ.சி.ரி நிறுவனம், 2012ஆம் ஆண்டு புஷ்பா ராஜபக்ஷ நிதியத்துக்கு ஒரு கோடி 97 இலட்சம் ரூபா காசோலை வழங்கப்பட்டுள்ளது. சீ.ஐ.சி.ரி நிறுவனத்துக்கு எச்.எஸ்.பி.சி அமெரிக்க டொலர் வங்கிக் கணக்கிலிருந்து இந்தத் தொகை மாற்றப்பட்டு பின்னர் புஷ்பா ராஜபக்ஷ நிதியத்துக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட காசோலை சீ.ஐ.சீ.ரி நிறுவனத்தின் செலவீனமாக காண்பிக்கப்பட்டுள்ளது. குறித்த முனையத்தை நாம் மீளப் பெறும்போது அவர்கள் செலவுசெய்த பணத்தை மீளச் செலுத்தவேண்டும். அதன் அடிப்படையில் பார்க்கும்போது புஷ்பா ராஜபக்ஷ நிதியத்துக்கு வழங்கிய பணத்தை நாட்டு மக்களே செலுத்தவேண்டும்.

அது மாத்திரமன்றி, ஹம்பாந்தோட்டை துறைமுகம் இரண்டாவது தொகுதி என்ற பெயரில் சைனா மேர்ச்ட் நிறுவனத்தால் ஸ்ரான்டட் சார்டட் வங்கியில் பேணப்படும் வங்கிக் கணக்கிலிருந்து காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த நிறுவனத்திலிருந்து பிரான்ஸிஸ் என்ற நபர் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதி 981321 என்ற இலக்கத்தைக் கொண்ட காசோலை மூலம் 3 கோடியே 94 இலட்சம் ரூபாய்களையும், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு முதல்நாள் அதாவது 2015 ஜனவரி 7ஆம் திகதி 981328 என்ற இலக்கத்தைக் கொண்ட காசோலை மூலம் 2 கோடியே 50 ஆயிரம் ரூபாவும், 981328 என்ற இலக்கத்தைக் கொண்ட காசோலை மூலம் 2 கோடியே 50 இலட்சம் ரூபாவையும் வழங்கியுள்ளார். நீலப்படையணியினால் தயாரிக்கப்பட்ட 245,000 ரீசேட்டுக்கள் மற்றும் 125,000 தொப்பிகளுக்கான கொடுப்பனவாக இந்தக் காசோலைகள் வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். தேர்தல் நடைபெறுவதற்கு முதல்நாள் கூட இவர்கள் தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் தரகுப் பணத்தைப் பெற்றுள்ளனர். அது மாத்திரமன்றி 2015 ஜனவரி 7ஆம் திகதி மற்றும் இரண்டு காசோலைகள் மூலம் தலா 2 கோடியே 50 ஆயிரம் ரூபா பணம் மாற்றப்பட்டுள்ளது.

கட்சி ஆதரவாளர்கள் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் அலரிமாளிகையில் தரகுப் பணத்தை இவர்கள் சேகரித்துக்கொண்டிருந்தனர். தேர்தலுக்கு முதல்நாள் மாத்திரம் 14 கோடி ரூபாவுக்கான காசோலைகளை மாற்றியுள்ளனர். இவை சைனா ஹார்பர் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பணம் பெற்றுள்ள நிலையில் நாட்டுக்காக கட்டப்படும் கட்டடங்கள் நாட்டின் தேவைக்காக அமைக்கப்பட்டன என்பதற்கு என்ன சான்றுகள் உள்ளன. தரகுப் பணத்தைப் பெறுவதற்காக துறைமுகம் போன்ற பாரிய திட்டங்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டனவா என்பது பாராளுமன்றத்தினால் ஆராயப்படவேண்டியுள்ளது.

நாட்டின் கடன்சுமை அதிகரிப்பதற்கு வெற்றியளிக்காத பாரிய திட்டங்களே காரணம். இதுபோன்ற வெற்றியளிக்காத திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்கள் அரசாங்கத்துக்குப் பணம் வழங்குவதாயின், அந்தப் பணத்தைப் பெறுவதற்காகவே இத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன என்ற சாதாரண சந்தேகம் எழுகிறது.

இதுமாத்திரமன்றி நுரைச்சோலை அனல்மின்நிலையத்தை நடத்திச் செல்லும் சீன நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து 2015ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தேர்தல் பிரசாரத்துக்காக 12 இலட்சம் ரூபா டீ.எஸ்.அபயசிங்க என்ற நபருக்கு வழங்கப்பட்டுள்ளது. அபயசிங்க என்பவர் சரண குணவர்த்தனவுக்கு நெருக்கமானவர்.” என்றுள்ளார்.

“எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருந்தால், எம்மைப் புறந்தள்ளிவிட்டு ஒரு அரசியலமைப்பினை அரசாங்கத்தினால் உருவாக்க முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

“எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

இன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.