இலங்கை
Typography

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆசிர்வாதம் கிடைத்தால் மாத்திரமே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியின் சார்பில் வேட்பாளராக களமிறங்க முடியும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் குழு தெரிவித்துள்ளது. 

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே சுதந்திரக் கட்சியின் 16 பேர் குழுவின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆசிர்வாதத்தைப் பெற்றுகொள்ள வேண்டுமானால், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்திலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக விலக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்