இலங்கை

மாகாண சபையின் செயற்பாடுகள் மற்றும் அமைச்சரவை தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா அழைப்பு விடுத்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு மாகாண சபையின் நிறைவேற்றுச் செயற்பாடுகள் இன்று முடங்கிய நிலையில் உள்ளது. இவ்வாறாக அதன் செயற்பாடுகளை முடங்கவிடாது ´வடக்கு மாகாண சபையின் அமைச்சர் சபை தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை’ என்ற விடயப் பரப்பில் விவாதித்து தீர்வொன்றைக் காண்பதற்காக மாகாண சபையின் விஷேட அமர்வு ஒன்று கடந்த 16.07.2018 அன்று கூட்டப்பட்டது.

மிக முக்கியத்துவம் வாய்ந்த அக் கூட்டத்தில் பங்குபற்றி அங்கு விவாதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட விடயங்களுக்குத் தகுந்த பதிலளிக்காமல், கூட்டத்தையே புறக்கணிப்பு செய்துவிட்டு ஊடகங்களிற்கான பதிலென்று முதலமைச்சர் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றார்.

மாகாணத்தின் ஏறத்தாழ 12 இலட்சம் மக்களிற்கான மாகாண சபையின் நிறைவேற்று செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ள இன்றைய நிலையில், அம் மக்களிற்கு நேர்மையுடனும், உண்மைத் தன்மையுடனும் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு முதலமைச்சரிற்கு உண்டு.

ஊடகங்களின் கேள்விக்குப் பதில், வாரத்துக்கொரு கேள்வி என்று தானே கேள்வியைக் கேட்டு தானே பதிலிறுக்கிக் கொண்டிருக்காமல், எம்மால் எழுப்பப்படும் கேள்விகளிற்கு அவரினால் மக்களிற்கு நேர்மையானதும் உண்மைத்துவமானதுமான பதில் அளிக்க முடியுமாயின், அவரைப் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைக்கின்றேன்.

தற்போது மாகாண சபையில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக மட்டுமல்ல, கடந்த நான்கு வருடம் ஒன்பது மாதங்களாக மாகாண சபையின் நிறைவேற்று செயற்பாட்டின் வினைத்திறனின்மை தொடர்பாகவும் மக்களிற்குப் பதிலளிக்கும் முகமாகவும் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன். ” என்றுள்ளது.

“எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருந்தால், எம்மைப் புறந்தள்ளிவிட்டு ஒரு அரசியலமைப்பினை அரசாங்கத்தினால் உருவாக்க முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

“எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

இன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.