இலங்கை

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஒஸ்ரின் பெர்னாண்டோ, அமைச்சுகள் உள்ளிட்ட அரச நிர்வாகத்துறையில் பல பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.