இலங்கை

எவ்வித எதிர்ப்புக்கள் வந்தாலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டே தீரும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

சீனா – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் பொலன்னறுவையில் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் மொத்த சனத்தொகையில், 1.4 வீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கும், 18 வீதமானோர் சிகரட் பாவனைக்கும், 14 வீதமானோர் மதுவுக்கும் அடிமையாகி உள்ளனர். அத்துடன், கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு போதைப் பொருள் கொண்டு செல்லப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு நேற்று தகவல் கிடைத்திருந்தது. ஆகவே, எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும், இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டே ஆகும்”என்றுள்ளார்.

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.