இலங்கை

“வடக்கு மாகாணத்துக்கு சட்டம்- ஒழுங்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும். அதன்மூலம், வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு முடிவுகட்ட முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், பொலிஸ்மா அதிபர் ஆகியோர், வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பின்னரும்கூட, யாழில் வன்முறைகள் தொடர்கின்றமை தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “வன்முறைகளை கட்டுப்படுத்த வேண்டுமாயின் இந்த பிரதேசத்தில் பேசப்படுகின்ற மொழியை தங்களது தாய்மொழியாகக் கொண்டவர்கள் இங்கே பொலிஸ் கடமையில் ஈடுபட வேண்டும். இல்லாவிடில் வன்முறைகளை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான விடயமாக அமையும். ஆனால், இந்த நடைமுறைகள் ஏற்படுத்தப்படும் வரை வடக்கில் தொடரும் வன்முறைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, மத்திய அரசாங்கம் விரைந்து இது தொடர்பாக உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.”என்றுள்ளார்.

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.