இலங்கை
Typography

இறுதி மோதல்களில் இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் விபரங்கள் மற்றும் அவர்களின் வைத்திய அறிக்கைகள் திரட்டும் பணி  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.  

வடக்கு மாகாண சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள  தீர்மானத்தின் அடிப்படையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளின் விபரங்கள், அவர்கள் பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற்ற அறிக்கைகள் போன்றவற்றை உடனடியாக வடக்கு மாகாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கையளிக்குமாறும் சுகாதார அமைச்சர்  ப.சத்தியலிங்கம் கோரியுள்ளார். 

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்பட்டுள்ளதாகவும், அதன்காரணமாக பல முன்னாள் போராளிகள் உயிரிழந்துள்ளதாகவும் பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்