இலங்கை

அரசியலில் நுழையும் எண்ணமில்லை என்று முன்னாள் இலங்கைக் கிரிக்கட் அணியின் தலைவரான குமார் சங்ககார தெரிவித்துள்ளார். 

அரசியலில் நுழையவிருப்பதாக வெளியாகும் செய்திகளை குமார் சங்கக்கார நிராகரித்திருப்பதாகவும், தன்னிடம் அவர் தொலைபேசி மூலம் இதனைத் தெரிவித்ததாகவும் மூத்த விளையாட்டு ஊடகவியலாளர் ரஞ்சன் பரணவிதான ருவிற்றர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையில் நடந்து வரும் துடுப்பாட்ட போட்டிகளின் வர்ணனையாளராக பணியாற்றுவதற்காக குமார் சங்கக்கார இலண்டனில் தங்கியிருக்கிறார். எனினும், இதுபற்றி அவர் தனது அதிகாரபூர்வ சமூக ஊடகங்களில் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, குமார் சங்கக்காரவை ஐ.தே.க.வின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் முயற்சிகளுக்கு, பாகிஸ்தான் அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் மேலும் ஊக்கமளிப்பதாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.