இலங்கை

பட்டப் பின்படிப்பு மற்றும் ஆய்வுகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று மீள நாடு திரும்பாத பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 486 பேரினது விபரங்களைப் பகிரங்கமாக வெளியிடவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இவ்வாறு வெளிநாடு சென்றுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து இதுவரை 813 மில்லியன் ரூபாய் அறவிடவேண்டியுள்ளதாகவும், நடைமுறையிலுள்ள சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கமைய இந்த அறவீடு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, "இதுவரை எமது பல்லைக்கழகங்களில் புலமைப் பரிசில்களைப் பெற்றுக்கொண்டு உயர்கல்விக்காக 486 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வெளிநாடு சென்று மீளத் திரும்பாதுள்ளனர்.

இதனால் மேற்படி தொகை எமது பல்லைக்கழகங்களுக்கு உரித்தானது. இதற்கிணங்க இதுவரை 813 மில்லியன் ரூபாய் அவர்களிடமிருந்து அறவிடவேண்டியுள்ளது. இது தொடர்பில் சில விரிவுரையாளர்கள் மற்றும் அவர்களின் சாட்சிகளாகக் கையொப்பமிட்டுள்ள சிலருக்கு எதிராக தற்போது வழக்கு தொடரப்படவுள்ளது. இது தொடர்பில் பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உயர் படிப்பிற்காக வெளிநாடு செல்வது தொடர்பில் பல்கலைக்கழகங்களில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் விரிவுரையாளர்கள் இவ்வாறு நடந்துகொள்வதால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் நாட்டு மக்களது நிதியில் இவ்வாறு வெளிநாடு செல்பவர்களைப் பதிவு செய்வதற்கு விஷேட பிரிவு ஒன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் உருவாக்கப்படும்.” என்றுள்ளார்.

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.