இலங்கை

திறைசேரியின் முழுமையான அனுமதியின்றி அரசாங்கம் மற்றும் அரச துறைச்சார்ந்த நிறுவனங்களுக்கு பணியாளர்களை சேர்த்துக் கொள்வதும், அவர்களுக்கு சம்பளம் வழங்குவதும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. 

இதற்கான விசேட சுற்று நிருபத்தை திறைசேரி வெளியிட்டுள்ளது.

இச்சுற்று நிருபத்துக்கமைய அரசாங்கம் மற்றும் அரச துறை சார்ந்த நிறுவனங்களுக்கு பணியாளர்களை சேர்த்துக் கொள்வதற்கு திறைசேரியின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் முழுமையான அனுமதி அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சுற்றறிக்கையை மீறி உள்வாங்கப்படும் ஆளணியை குறித்த நிறுவனத்துக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் அல்லது திணைக்களத்தின் பணிப்பாளர் அல்லது மாகாண சபைக்குப் பொறுப்பான செயலாளர் மற்றும் அந்நிறுவனத்தின் தலைவர் ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும் என்று திறைசேரியின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தால் 2018ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட இலக்கம் 03/2018 எனும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆளணிக்கு அப்பால் பணியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்ளுதல் மற்றும் அவர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அந்நிறுவனத்தின் தலைவர், நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் கணக்காய்வாளர்கள் பொறுப்பு வகிக்க வேண்டும் என்று அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது.

மாகாண சபைகள் உள்ளிட்ட அனைத்து அரசாங்க நிறுவனங்களில் தற்போது இருக்கும் மேலதிக ஆளணிகள் தொடர்பில் கவனத்திற் கொள்வதற்காக அவர்களின் எண்ணிக்கை மற்றும் சம்பள விவரங்களை முகாமைத்துவ சேவை திணைக்களத்துக்கு அறியத்தருமாறும் சுற்று நிருபத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இவ்விசேட சுற்று நிருபத்துக்கமைய தேசிய சம்பள ஆணைக்குழுவின் பரிந்துரை மற்றும் திறைசேரியின் முழுமையான அனுமதியின்றி அரசாங்க மற்றும் அரச துறைசார்ந்த நிறுவனங்களில் பணியாளர்களை இணைத்துக் கொள்வதாயின் நிறுவனத்துக்குப் பொறுப்பான செயலாளர், பிரதான செயலாளர், திணைக்களத் தலைவர் மற்றும் நிதி தலைவர் ஆகியோரே அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.