இலங்கை

மன்னார் மாவட்டத்திலுள்ள மடுத் திருத்தல பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அபிவிருத்தியை மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

கத்தோலிக்க பக்தர்களின் பக்தி மிகுந்த புனித திருத்தலமான மடுத் தேவாலயம் பௌத்த மற்றும் இந்து மக்களின் திரு யாத்திரைக்கும் பாத்திரமாகியுள்ளது.

வருடாந்த திருவிழாவுக்கு மட்டுமன்றி வருடத்தின் எல்லா சந்தர்ப்பங்களிலும் யாத்திரிகர்களும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளும் மடு தேவஸ்தானத்தை தரிசிக்க வருவதுண்டு.

கடந்த கால யுத்தங்களின் போது இந்த தேவாலயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நீண்டகாலமாக பராமரிப்பு அல்லது மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. இதனால் மடு திருத்தல பிரதேசம் கஷ்டப் பிரதேசமாகவும் குறைந்த வசதிகள் கொண்ட பிரதேசமாகவும் காணப்படுகிறது. மேற்படி காரணங்களைக் கருத்திற்கொண்டு மடு திருத்தலம் உள்ளிட்ட பிரதேசங்களை புனித பூமியாகப் பிரகடனப்படுத்தி போக்குவரத்து, நெடுஞ்சாலை, நீர் விநியோகம் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதேசத்தில் ஓய்வு விடுதி உள்ளிட்ட தங்குமிட வசதிகளை ஏற்படுத்தவும் ஜனாதிபதியினால் அமைச்சரவைக்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டு ள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அமைச்சரவை அதற்கான அங்கீகாரத்தை நேற்று வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.