இலங்கை
Typography

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதவானால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 02 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களின் போராட்ட நடவடிக்கையின் போது கடற்தொழில் நீரியல் வள திணைக்களம் சேதப்படுத்தப்பட்டமை மற்றும் அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு பிற்பகல் 02.45 அளவில், து.ரவிகரன் கைது செய்யப்பட்டார்.

பின்னர் து.ரவிகரனை முல்லைத்தீவு பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போதே, அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்