இலங்கை
Typography

ஊழலை எதிர்த்து ஜனநாயகத்தை மதிக்கின்ற சிறந்த அரசியல் ஆளுமையை நாட்டு மக்கள் இன்று எதிர்பார்க்கின்றனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளரான காலஞ்சென்ற அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தனவின் உருவச் சிலையை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன ஒரு சிறந்த, நேர்மையான அரசியல் ஆளுமையாளராவார் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஊழலுக்கு எதிராக போராடிய அவர் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவராவார் என்று குறிப்பிட்டார். இது போன்ற நேர்மையான அரசியல் ஆளுமைகள் நாட்டுக்கு மிகவும் தேவையாகும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்