இலங்கை
Typography

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்தால், அது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் தான் கவலையடைவதாக தெரிவித்துள்ள அமைச்சர், நாட்டின் சட்டம் பிக்குகளுக்கும் பொருந்தும் எனவும் கூறியுள்ளார்.

ஞானசார தேரருக்கு அந்த தீர்ப்பு சட்டப்படியே வழங்கப்பட்டுள்ளது. தேரருக்கு எதிராக செயற்பட்ட சட்டம் ஏனையவர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்தாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு குற்றச்சாட்டுகளிலும், அவர் குற்றவாளி என அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், கடந்த புதன்கிழமை அவருக்கு 6 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்