இலங்கை
Typography

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக விஷேட நிபுணர்கள் அடங்கிய சுயாதீன குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இந்த உடன்படிக்கை சம்பந்தமாக பல்வேறு தரப்பில் இருந்தும் கிடைக்கப் பெற்றுள்ள கருத்துக்களை கருத்திற்கொண்டு இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பொருளியல் பேராசிரியர் தேசமணி டபிள்யு.டி.லக்ஷ்மன் அந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, திறந்த பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியர் சிரிமேவன் கொலம்பகே, களனி பல்கலைக்கழகத்தின் பொருளியல் சம்பந்தமான முன்னாள் பேராசிரியர் அஜிதா தென்னகோன், சுயாதீன ஆலோசகர் கலாநிதி சனத் ஜயநேத்தி மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் உதவி ஆளுநர் ஆர்.ஏ. ஜயதிஸ்ஸ ஆகியோர் அந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்