இலங்கை
Typography

“வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள். ஆனால் மாகாண சபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே, எவருடன் சேருவது என்பதை தேர்தல் காலத்திலேயே தீர்மானிப்பேன்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண பேரவை செயலகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் கூறியுள்ளதாவது, “என்னை பலரும் அடுத்த மாகாண சபை தேர்தலில் போட்டியிட தம்மோடு வருமாறு அழைக்கின்றார்கள். ஆனால் இது தொடர்பாக நான் அந்த நேரத்திலேயே முடிவெடுப்பேன். அத்துடன் தற்போது அடுத்த மாகாண சபை தேர்தலை எப்போது நடத்துவது என முடிவில்லாத நிலையில் அதற்கு இன்னமும் ஆறு ஏழு மாதம் தாமதமாகலாம். எனவே இது தொடர்பாக சிந்திப்பதற்காக நீண்ட காலம் இருக்கிறது. இந்நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியுடன் நான் கூட்டு வைப்பதா இல்லையா என்பது தொடர்பாக சிந்திப்பேன்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS