இலங்கை
Typography

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தற்போது பிரதமராக இருக்கின்ற ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறுவார் என்று மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். 

பூண்டுலோய டன்சினன் தோட்டபகுதியில் 404 இந்திய வீடமைப்பு திட்டங்களை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பழனி திகாம்பரம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டில் பல தலைவர்கள் வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை சற்று மீட்டி பார்க்கவேண்டும். 2015ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரங்களின் போது மலையக மக்களுக்கு தனிவீட்டுத்திட்டத்தை அமைத்து தருவதாகவும் அவர்களுக்கான புதிய கிராமங்களை ஏற்படுத்தி தருவதாகவும் வாக்குறுதி அளித்து இருந்தார். இதற்கமைய இந்த டன்சினன் தோட்ட மக்களுக்கு 404 வீடுகள் அமைக்கபட்டு காணி உறுதிபத்திரங்களும் வழங்கபட்டுள்ளன.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS