இலங்கை
Typography

“நான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை. அது தொடர்பில், எனக்கு எந்தவொரு விருப்பமும் இல்லை.” என்று இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார். 

தனது பேஸ்புக் சமூக வலைத்தளத்தில், அரசியல் பிரவேசம் தொடர்பான பதிவொன்றை இட்டுள்ள குமார் சங்ககார, தன்னுடைய அரசியல் பிரவேசம் தொடர்பில் வெளியாகிவரும் செய்திகளைக் கருத்திற்கொண்டே, தான் இந்தப் பதிவை இடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டின் பின்னர், பல வருடங்களாகத் தனக்காக அர்ப்பணித்த தனது குடும்பம் மீதே, தான் தற்போது முழுமையான அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு விதத்திலும், தனக்கு அரசியல் தொடர்பான ஈடுபாடு இல்லையென்றும், அரசியலும் மக்கள் சேவையும், மிகவும் பொறுப்புடன் செய்யக்கூடியவை என்றும் குமார் சங்ககார மேலும் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்