இலங்கை

‘கட்சியொன்றில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானவர்கள், சுயாதீனமாகச் செயற்பட்டால், அவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்கப்படும். அப்போது, அவர்கள் பதவி இழக்கும் சூழல் ஏற்படும்’ என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், கூட்டு எதிரணியுடன் (மஹிந்த அணி) இணைந்து பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அவ்வாறான நிலையொன்று ஏற்படுமாயின், கூட்டு எதிரணி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மீண்டும் கேள்விக்குள்ளாகும் என்று குறிப்பிட்டு கேள்வியெழுப்பினர்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில், சபாநாயகர் கரு ஜயசூரிய கடந்தவாரம், அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். இந்நிலையில், பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு யாராவது தீர்மானித்தால், அவ்வாறானவர்கள், தாம் போட்டியிட்ட கட்சியிலிருந்து நீக்கப்படுவர். அப்போது, பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோய்விடும் என்று பதிலளித்த ராஜித்த சேனாரத்ன, அதன்பின்னர், ஆரம்பத்திலிருந்து வரவேண்டும் என்றுள்ளார்.

அரசியலமைப்பின் 19வது திருத்தத்துக்கு அமைய, பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சி ஒன்றின் கீழ், போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள், பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படமுடியாது. சுயேட்சையாகப் போட்டியிட்டு தெரிவானவர்கள் மட்டுமே, சுயேட்சையாக செயற்பட முடியும் என்று தெரிவித்த அவர், கட்சியொன்றிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானவர்கள், சுயேட்சையாக செயற்பட்டால், அவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்கும் அதிகாரம் அந்தந்த கட்சிகளின் பொதுச்செயலாளருக்கே உள்ளது என்றுள்ளார்.

இதேவேளை, தமது கட்சி உறுப்பினர்கள், கூட்டு எதிரணியுடன் இணைந்து சுயாதீனமாக செயற்படுவதற்கு முடிவு செய்தால், அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.