இலங்கை
Typography

வடக்கு மாகாணத்தில், நல்லவர்களையும் திறமையானவர்களையும் விட்டுவைக்க மாட்டார்கள் போலத் தெரிகிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், புதிதாக அமைக்கப்பட்ட தாதிகள் விடுதி மற்றும் இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் அரச ஒசுசல மருந்தகத் திறப்பு விழா மற்றும் மீள்வாழ்வு நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு என்பன, நேற்று வியாழக்கிழமை காலை நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இருதய அறுவைச் சிகிச்சைகள் இடம்பெறுகின்ற நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் நான்கில் ஓரிடத்தை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையும் பெற்றிருக்கிறது. இங்கு இருக்கின்ற சிறந்த அறுவைச் சிகிச்சை நிபுணரை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிகிறேன்.

நல்லவர்களையும் திறமையானவர்களையும் இங்கு விட்டுவைக்க மாட்டார்கள் போலத் தெரிகிறது. நற்சேவை செய்து வருபவர்களை, தயவுசெய்து தொடர்ந்து இங்கு சேவைசெய்ய வழிவிட வேண்டும். அத்துடன், வடக்குப் பகுதி வைத்தியர்களின் குறைபாடுகளையும் பிரச்சினைகளையும் அறிந்து, அவர்களுக்குச் சுகாதார அமைச்சர் உறுதுணையாக இருக்க வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS