இலங்கை
Typography

எல்லை வரம்பு அறிக்கையை பாராளுமன்றம் இந்த மாதம் (ஆகஸ்ட்) அங்கீகரித்தால், ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

மாகாண சபைத் தேர்தல் தொகுதிகள் தொடர்பான எல்லை வரம்பு அறிக்கை எதிர்வரும் 24ஆம் நாள் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்த நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்